Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன், கே.தயா, சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி - ஏ9 வீதி, ஆனையிறவு பகுதியில், இன்று (02) அதிகாலை 3 மணியளவில் நடைபெற்ற வீதி விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த இரண்டு டிப்பர் வாகனங்களுடன் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வான் ஒன்று மோதியதிலேயே, இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதில் ஹயஸ் ரக வாகன சாரதி, ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
அத்துடன், டிப்பர் சாரதியும் ஹயஸ் வாகனத்தில் பயணித்த நபர் ஒருவரும் காயமடைந்து நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் ஹயஸ் வாகனத்தில் பயணித்தவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த சாரதி, கொழும்பு - வெள்ளவத்தையைச் சேர்ந்த ஆதிமூலம் பரமேஸவரன் (வயது 49) என, பொலிஸார் தெரிவித்தனர்,
6 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago