2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

விமலும் கம்மன்பிலவும் புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்து

Editorial   / 2020 ஜூலை 18 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும்,  பிவிதுறு ஹெல உறுமையவின் ​தலைவரான உதய கம்மன்பிலவும் புதிய ஒப்பந்தமொன்றில் இன்று (18) கைசாத்திட்டனர்.

மேற்படி, இருவரும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலை வெற்றிகொள்வர் என்ற நம்பிக்கை உறுதியாக உள்ளதாகவும், அதனால் தேர்தலை வெற்றிகொண்ட பின்னர் தங்களால் மக்களுக்கு செய்ய முடியுமென வாக்குறுதி அளித்துள்ள சேவைகளை நிறைவேற்றி கொடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தே இந்த ஒப்பந்தத்தை கைசாத்திட்டுள்ளனர். 

ஒப்பந்தத்தில் கைசாத்திட்ட இருவரும் மேற்படி வாக்குறுதிகளை நிறைவேற்றுவோமென உறுதி மொழி கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .