2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விமானத்திலிருந்து கீழிறக்கப்பட்ட அதிகாரி

Editorial   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விவசாய திணைக்களத்துடன் இணைந்த நிறுவனமொன்றின் பிரதான அதிகாரியொருவர், அதிக மதுபோதையில் விமானத்தில் பயணித்தமையால், அவர், விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3.15 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் நோக்கி புறப்படத் தயாரான, எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே.349 என்ற விமானத்திலிருந்தே, குறித்த அதிகாரி இறக்கி விடப்பட்டுள்ளார்.

இவர், அதிக மதுபோதையுடன் இருந்தார் என்றும் விமானப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால், விமானத்தின் அலுவலகர்களால், இவர் கீழிறக்கப்பட்டு, க​டிதம் மூலமான வாக்குமூலத்துடன், கட்டுநாயக்க விமானநிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .