2025 ஜூலை 14, திங்கட்கிழமை

விமான நிலைய வருகை தரும் பகுதி தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்

A.P.Mathan   / 2020 மார்ச் 22 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதைத் தடுப்பதற்காக விமான நிலையத்துக்கு வருகை தரும் பகுதியை மூடிவிட எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெளிச்செல்லும் பகுதி திறந்திருக்கும் என்பதுடன், இலங்கைக்கு வெளியே பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்லும் விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து இடைநிற் பயணிகள் (Passenger transit) செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

துறைமுகத்தில் அனைத்து ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளும் தடையின்றி வழமை போன்று மேற்கொள்ளப்படும்.

பயணிகள் நாட்டுக்குள் வருகைதருவதைத் தவிர்ப்பதற்கு துறைமுக அதிகார சபை பின்பற்றும் நடைமுறைகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக நாட்டில் உருவாகியிருக்கும் நிலைமைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை இந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .