Princiya Dixci / 2022 ஏப்ரல் 03 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
"இந்த ஜனநாயக விரோத அரசாங்கத்துக்கு எதிராக வீட்டில் இருந்தவாறே நாளை எதிர்ப்பை வெளியிடுங்கள். வீடுகளுக்கு முன்னால் கறுப்பு கொடிகளை பறக்கவிடுங்கள்" என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
தலவாக்கலையில் நேற்று (02) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு, உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், " நாட்டில் மின்சாரம் இல்லை, வீட்டிலே உணவுப் பொருள்கள் இல்லை, எரிபொருள் விலை, எரிவாயும் இல்லை. பொருள்களின் விலைகளும் உச்சம் தொட்டுள்ளன. இவை தொடர்பில் தமது உள்ளக்குமுறல்களை நாளை வெளிப்படுத்துவதற்கு மக்கள் தயார் நிலையில் இருந்தனர். ஆனால், மக்கள் எழுச்சிக்கு பயந்து, ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
“தடையையும் மீறி போராடுவோம் என மக்கள் அழைக்கின்றனர். ஆனால் மக்களைப் பாதுகாப்பதே தலைமைகளுக்கு அழகு. அந்தவகையில்தான், நாம் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம்.
“எனினும், வீட்டில் இருந்து எதிர்ப்பை வெளியிடுங்கள். வீடுகளுக்கு முன்னால் கறுப்பு கொடிகளை பறக்கவிடுங்கள்.
“மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களுக்கு அஞ்சியுள்ளனர். அதுமட்டுமல்ல ஊடகவியலாளர்களையும் தாக்க ஆரம்பித்துள்ளனர். அவசரகால நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஜனநாயகத்தை நசுக்க முற்படும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்போம்" என்றார்.
4 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Jan 2026