Editorial / 2026 மே 05 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ. அச்சுதன்
இலங்கையில் வாழும் பௌத்த மற்றும் இஸ்லாமிய சமூகங்களுக்கு ஒரே காலப்பகுதியில் அமைந்துள்ள புனிதமான இரண்டு சமய நிகழ்வுகளை அமைதியாகவும், பரஸ்பர கௌரவத்துடனும் முன்னெடுப்பதற்கான சூழலை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனத் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
“இவ்வருடம் மே மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரை அரசாங்கத்தினால் ‘அரச வெசாக் வாரம்’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, மே மாதம் 28 ஆம் திகதி முஸ்லிம்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் ஆரம்பமாவதுடன், அதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் முஸ்லிம்கள் தமது மார்க்கக் கடமையான ‘உழ்ஹிய்யா’ (பலியிடல்) கிரியைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது.
நாட்காட்டி மாற்றங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள இந்தத் தற்செயலான நிலைமை, முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் தமது மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதில் ஏதேனும் தடைகள் ஏற்படுமோ என்ற அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. குறிப்பாக, கடந்த காலங்களில் இவ்வாறான தருணங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மீண்டும் ஏற்படாதிருப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும்.
வெசாக் என்பது அஹிம்சை மற்றும் கருணையைத் தாரக மந்திரமாகக் கொண்டது. அதேபோல், உழ்ஹிய்யா என்பது இறைவனுக்காகச் செய்யப்படும் தியாகம் மற்றும் ஏழைகளுக்கான ஈகையைப் பறைசாற்றும் கடமையாகும். இந்த இரண்டு உயரிய விழுமியங்களும் ஒன்றையொன்று மோதிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை; மாறாக, பல்லின சமூகம் வாழும் ஒரு நாட்டில் இவை பரஸ்பர புரிதலுக்கான களமாக அமைய வேண்டும்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இது தொடர்பில் தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளதுடன், ஜனாதிபதி உள்ளிட்ட அரச மேலிடங்களுக்கும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. போயா தினமான மே மாதம் 30 ஆம் திகதி தவிர்ந்த ஏனைய நாட்களில் இக்கடமைகளைச் சட்ட ரீதியாக நிறைவேற்ற முடியும் என்ற போதிலும், கள யதார்த்தங்களை உணர்ந்து அரசாங்கம் முறையான சுற்றுநிரூபங்கள் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க வேண்டும்.
சிறுபான்மை மக்களின் உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், இந்த விவகாரத்தை வைத்து அரசியல் இலாபம் தேட நாம் விரும்பவில்லை. நாட்டின் அமைதி மற்றும் இனங்களுக்கிடையிலான சகவாழ்வே எமக்கு முதன்மையானது. எமது நோக்கம் இன முறுகல்களைத் தூண்டுவதல்ல; மாறாக எழக்கூடிய பிணக்குகளுக்கு முன்கூட்டியே அரசாங்கத்தின் ஊடாகத் தீர்வு காண்பதாகும்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago