2025 ஜூலை 17, வியாழக்கிழமை

‘வெடிப்பொருள்களை கண்டறியும் உபகரணம் பஸ்களில் பொருத்தப்படவுள்ளது’

Editorial   / 2019 ஏப்ரல் 28 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் போக்குவரத்து பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்புக்காக, வெடிப்பொருட்களை அடையாளம் காண்பதற்குரிய தொழிநுட்ப உபகரணத்தை பஸ்களின் பின்புற கதவில் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

வெகு விரைவில் பஸ்களில் இந்த உபகரணங்களைப் பொருத்த நடவடிக்கை எடுப்பதாகவும் குறித்த உபகரணங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் பல நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்  தலைவர் கெமுனு விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த உபகரணத்தைப் பொருத்திய பின்னர்,  பயணிகள் பின்பக்க கதவின் ஊடாக மாத்திரம் பஸ்ஸில் ஏற அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பயணிகளின் பாதுகாப்புக்காகவே இந்த உபகரணத்தை கொண்டு வரத் தீர்மானித்துள்ளதால், இதன் விலை மற்றும் இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கத்தின் உதவி கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X