Freelancer / 2025 நவம்பர் 29 , பி.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போது பெய்த மழை காரணமாக பல்வேறு சிக்கலான நிலைகள் உருவாகியுள்ளன. குறிப்பாக தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மழைநீர் பல்வேறு வாழ்விடங்களில் புகுந்ததன் காரணமாக லெப்டோஸ்பைரோசிஸ் நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், தோல் வியாதிகள், சுவாசத் தொற்றுகள், வயிற்றோட்டம் போன்ற நோய்களும் ஏற்படலாம்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அசுத்தமான நீரில் நடைபயணம் செய்த பிறகு, அல்லது அந்த பகுதிகளில் சென்று வந்தால், சவர்க்காரம் பயன்படுத்தி கை, கால் உள்ளிட்ட உடல் பகுதிகளை நன்றாகக் கழுவ வேண்டும்.
சுத்தமான குடிநீரைப் பருக வேண்டும். கொதிக்கவைத்த நீரைப் பருகுவது சிறந்தது.
வாழ்விடங்களை எப்போதும் தூய்மையாக பேண வேண்டும். சுகாதாரமற்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உடல் நலத்தில் கவனம் செலுத்தி, நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க வேண்டியது அவசியம்.
வைத்திய சிகிச்சை தேவைப்படும் போது தாமதமின்றி வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார். R
7 hours ago
02 Dec 2025
02 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
02 Dec 2025
02 Dec 2025