Editorial / 2025 நவம்பர் 19 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தில் பருவ மழை காரணமாக அங்குள்ள ஆறு குளம் ஆகியவற்றிலும் கடற்கரை பகுதிகளில் அதிகளவான மீன் இனங்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இம்மாவட்டத்தில் உள்ள கல்முனை கடற்கரை பள்ளிவாசல் பகுதி மற்றும் கிட்டங்கி வீதி, சொறிக் கல்முனை , சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை பகுதிகளில் வடிந்தோடும் வெள்ள நீரில் சிறு மீன் முதல் பெரிய மீன்கள் கட்டுவலை மற்றும் எறி வலை மூலம் பிடிக்கப்பட்டு அவ்விடத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதிகமாக பிடிக்கப்படும் மீன்களை சமையலுக்காக அவ்விடத்தில் மீனவர்களால் விற்கப்படுவதுடன் மக்கள் ஆர்வமாக கொள்வனவு செய்வதை காண முடிகிறது.தற்போது பெய்யும் மழை காரணமாக நன்னீர் மீன்கள் அதிகளவாக பிடிக்கப்படுகிறது.

இதில் கோல்டன் செப்பல், கணையான் ,கொய் கொடுவா, பொட்டியான், வெள்ளையா பொடி, இறால்,நண்டு வகைகள் போன்ற மீன்கள் அதிகளவான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன் இதர மீன்கள் குறைந்த விலையில் விற்பனையாகிறது.இதனால் நன்னீர் மீன் பிடித்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் நல்ல வருமானம் ஈட்டக்கூடிய தாக்க உள்ளதாக தெரிவித்தனர்.

இதே வேளை பாண்டிருப்பு, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை, சம்மாந்துறை, கல்முனை , மீன் சந்தையில் மீன் விற்பனை சூடுபிடித்துள்ளதுடன் மீனவர்கள் பிரதான வீதிகளில் தற்காலிகமாக மீன் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.



40 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
58 minute ago
1 hours ago