Freelancer / 2021 ஜூலை 24 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகளில் கட்டில்கள் நிரம்பியுள்ளதால், இலங்கையின் சுகாதார அமைப்பு தீர்ந்துவிட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனைகள் அதிகபட்ச திறனில் செயல்படுகின்றன, அதே நேரத்தில் ஒட்சிஸனின் தேவையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இதேவேளை அதிகரிக்கும் ஒட்சிஸனின் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
சில பெரிய தேசிய மருத்துவமனைகள் நோயாளிகளை இடமாற்றம் செய்ய அடிப்படை மருத்துவமனைகளின் உதவியை நாடியுள்ளன, ஆனால் அடிப்படை மருத்துவமனைகளும் முழு திறனில் செயல்படுகின்றன என்று அவர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாறுபாடு கண்டுபிடிக்கப்படுவதை விட பல பகுதிகளில் அதிகமான அளவு பரவியிருப்பதால், வரும் நாட்கள் மிக மோசமானதாக இருக்கும் என மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.
இதுவரை கட்டுப்பாடுகள் பற்றி பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால், சுகாதார அமைப்பு தீர்ந்துவிட்டால், தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பாதிக்கப்படுகின்றார்களானால், நாட்டை முடக்குமாறு சில மருத்துவ வல்லுநர்கள் கோரிக்கை விடுக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
30 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர், ஆனால் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவங்களும் உள்ளன.
இதேவேளை, டெல்டாவால் புதிய அலைக்கு நாங்கள் தயாராக வேண்டும். அனைத்து சுகாதார நெறிமுறைகளையும் பின்பற்றவும், பொதுவில் கூடுவதை தவிர்க்கவும், வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றவும் மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று ஒரு மூத்த சுகாதார அதிகாரி கூறினார். R
7 minute ago
16 minute ago
43 minute ago
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
43 minute ago
20 Dec 2025