2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வைத்தியர் ஷாஃபியை புதிய குழு விசாரிக்கும்

Editorial   / 2019 டிசெம்பர் 13 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

திட்டமிட்டுக் கருத்தடை செய்தாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் முஹமது ஷாஃபி ஷிஹாப்தீனிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, புதிய குழுவொன்று நியமிக்கப்படுமென, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் (சி.ஐ.டி), நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

வைத்தியர் ஷாஃபிக்கு எதிரான வழக்கு, குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில், நேற்று (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சி.ஐ.டியினர் மேற்கண்டாவாறு தெரிவித்தனர்.

சட்டவிரோதமான முறையில் பணம் திரட்டியமை, பயங்கரவாதிகளுக்கு ஒத்துழைப்பு நல்கியமை, திட்டமிட்ட முறையில் கருத்தடைச் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், அவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் ஷாஃபி, இவ்வருடம் ஜூலை மாதம் பிணையில் விடுதலைச் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த வழக்கு ஜனவரி 16ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .