Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 18 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபிக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து, அரசாங்கத்துக்கு அழுத்தம் தெரிவிக்கும் வகையில், அக்மீமன பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.கே. சுகத் உள்ளிட்டவர்கள் இன்று காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
அக்மீமன பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்களும் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
குறித்த வைத்தியர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவரால் பாதிக்கப்பட்ட தாய்மாருக்கு நட்டஈடு வழங்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் வைத்தியர் ஷாபிக்கு எதிராக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் இந்திக நவரத்னவால் பிரதேச சபையில் முன்வைத்த யோசனையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் அனில் பிரியதர்சன உறுதிப்படுத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
7 minute ago
2 hours ago
2 hours ago