2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

விசேட விவாதம் ஆரம்பமானது

Kanagaraj   / 2016 ஜனவரி 12 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக, முழு நாடாளுமன்றத்தையும் அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவது குறித்து சமர்ப்பிக்கப்பட்ட யோசனை மீதான விசேட விவாதம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

நாடாளுமன்றம், பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் இன்றுக்காலை 9.30க்கு கூடியது.

அவையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த யோசனை மீதான விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் ஆரம்பித்து வைத்து உரையாற்றிக்கொண்டிருகின்றார்.

இந்த யோசனை மீதான விவாதம்  பிற்பகல் 1.30 வரையில் இடம்பெறும்.

இந்த யோசனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த சனிக்கிழமை முன்வைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X