Kanagaraj / 2016 ஜனவரி 18 , பி.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைக்கமைய, இறுதி யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை ஆக்குவதற்கான நான்குவித நீதித் துறைக்கட்டமைப்புக்களை, அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
இறுதித் தெரிவு, பெப்ரவரிக்கு முன்னர், அரசாங்கத்தினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படும் என, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
தெரிவுசெய்யப்பட்ட உள்நாட்டுப் பொறிமுறையானது நாடாளுமன்ற அங்கிகாரத்துக்காக, மார்ச் மாதம் முன்வைக்கப்படும்.
இதனால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஜூன் மாத அமர்வில் வாய்மொழி அறிக்கையைச் சமர்ப்பிக்க போதிய அவகாசம் கிடைக்கும்'
எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல வெளிநாட்டு நீதிமன்றம் அல்லது கலப்பு நீதிமன்றம் இருக்கமாட்டாது. உள்நாட்டு விசாரணை ஆரம்பித்த பின்னர் வெளிநாட்டு தொழில்நுட்ப சேவையை பெற அரசாங்கம் எண்ணியுள்ளது என அவர் தெரிவித்தார்.
என்னவடிவில் அமைத்தாலும், உள்நாட்டுப் பொறிமுறையின் பொறுப்பு உண்மையை அறிதல், பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம், மீண்டும் குற்றங்கள் நடக்காது இருப்பதை உறுதிசெய்தல் என்பனவாகும்.
உலக சமுதாயம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தொடர்பில், இலங்கையின் எதிர்வினைகளை அவதானித்துக் கொண்டிருப்பதால் நாம் விரைந்து செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பின்னணியில் தான், கடந்தவாரம் இலங்கைக்கு வந்த பிரித்தானிய வெளிநாட்டு இராஜாங்க அமைச்சர் ஹூகோ ஸ்வையர், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஜூன் மாதம் இலங்கை சமர்ப்பிக்கும் வாய்மொழி அறிக்கை வெறும் பூசிமெழுகலாக இருக்கமுயாதெனத் தெரிவித்தாக கூறினார்.
17 minute ago
19 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
19 minute ago
58 minute ago