2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

விபசார விடுதி முற்றுகை: அறுவர் கைது

Gavitha   / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை பிரதேசத்தில் விபசாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (07) கைது செய்துள்ளனர். மேலும், குறித்த விபசார விடுதியில் பணியாற்றிய 3 ஆண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார், 6 பேரையும் கைது செய்துள்ளனர். எனினும், குறித்த விடுதியை நடத்திச் சென்ற வர்த்தகர் தப்பிச்சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் எம்பிலிபிட்டிய மற்றும் கொடகாவெல பகுதியைச் சேர்ந்த 20 தொடக்கம் 22 வயதுடையவர்கள் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .