2025 மே 17, சனிக்கிழமை

விபத்தில் இரு பெண்கள் உட்பட 3பேர் பலி

Thipaan   / 2015 ஓகஸ்ட் 30 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

புளத் சிங்கள பஹல நாரகல பகுதியிலுள்ள செங்குத்துச் சரிவில் லொறியொன்று விழுந்து விபத்துக்குள்ளானதில், இரண்டு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரணயிலிருந்து புளத் சிங்களவுக்கு சென்று கொண்டிருந்த லொறியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிரில் வந்து கொண்டிருந்த ஆட்டோவுடன் மோதுவதைத் தவிர்க்க முற்பட்டபோதே லொறி செங்குத்துச் சரிவில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

புளத்சிங்கள மற்றும் கோவின்ன பகுதிகளைச் சேர்ந்த 29 வயதுக்கும் 44 இடைப்பட்ட வயதுடைய லொறியின் சாரதி மற்றும் அதில் பயணித்த இரண்டு பெண்கள் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .