2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விபத்தில் தாயும் மகளும் பலி

Thipaan   / 2016 ஒக்டோபர் 15 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி - அவிசாவளை வீதியின் மாடொல பகுதியில், முச்சக்கரவண்டியும் கப் வண்டியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில், தாயும் மகளும் உயிரிழந்துள்ளதுடன், 3 வயதுக் குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்தில், எரன்னகொட, துருவில பகுதியைச் சேர்ந்த 70 வயதான தாயும் 40 வயதான மகளுமே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கப் வண்டியை, முச்சக்கரவண்டி முந்திச் செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .