2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

விமல் தம்பதிக்கு மீண்டும் அழைப்பு

Gavitha   / 2016 ஜனவரி 18 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச மற்றும் அவரது மனைவி ஷஷி வீரவன்ச ஆகியோர், பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், இந்த வாரத்தில், ஆணைக்குழுவில் முன்னிலையாவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடமைப்பு அமைச்சுக்காக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனம் ஒன்றை, தனது கணவரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தனது சொந்தப்பாவனையில் ஈடுபடுத்தினார் என, ஷஷி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது, தமது உறவினர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியின் உறவினர்களுக்கும் வீடுகளை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், விமல் வீரவன்சவிடம் விசாரணை நடாத்தப்படவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X