2025 ஜூலை 02, புதன்கிழமை

வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

Kogilavani   / 2017 மார்ச் 27 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகையிரத சாரதிகளால் இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்க திட்டமிட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

புகையிரத சாரதிகளின்  பிரச்சினைகள் தொடர்பில், போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக  புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடம்கொட குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புகையிரத ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை நீக்க, நாளை நாடாளுமன்றத்தில்  அனுமதியை பெற்றுக் கொள்ளவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இதன் காரணமாகவே, தமது வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடம்கொட தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .