Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பெய்ஜிங்கிலிருந்து ஏ.பி.மதன்
இலங்கையின் நடுநிலையான இராஜதந்திரக் கொள்கையினால் வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்று இலங்கை வளர்ச்சியடையும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள மங்கள சமரவீர, சீன ஜனாதிபதியுடனான சந்திப்பினைத் தொடந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “சீன விஜயமானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் நடுநிலையான இராஜதந்திரக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கிறேன்” என்றார்.
“எத்தனையோ நாடுகளுக்கு இராஜதந்திர ரீதியான விஜயங்களை மேற்கொண்டிருந்த போதிலும், சீனாவுக்கான இவ்விஜயம் பூரண திருப்திகரமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் நடுநிலையான இராஜதந்திரக் கொள்கையினால் வெளிநாடுகளின் உதவிகள் தாராளமாக இலங்கைக்குக் கிடைப்பதோடு, எதிர்கால இலங்கையின் சுபீட்சத்துக்கும் உதவும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.
21 minute ago
31 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
31 minute ago
1 hours ago
1 hours ago