2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

ஸ்ரீநேசன் எம்.பி. விபத்தில் காயம்

Freelancer   / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தமிழரசுகக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் விபத்தில் காயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு அண்மையில் அவரின் வாகனமும் கார் ஒன்றும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அம்பாறை - ஆலையடிவேம்பில் நேற்று (14) நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்துக்குச்  சென்றுவிட்டுத் திரும்பியபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில், காயமடைந்த அவர் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளைக் களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .