Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசமைப்பு தொடர்பான விடயங்களில் தமது நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அரசமைப்புக் குழுவொன்றை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, மேற்படி யோசனையை முன்வைத்துள்ள நிலையில், அந்த யோசனையை அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் இராஜாங்க அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க வழிமொழிந்துள்ளார்.
புதிய அரசமைப்பு மற்றும் 20 ஆவது திருத்தம் உட்பட அரசமைப்பு தொடர்பான எந்தவொரு விடயத்தையும் ஆய்வுசெய்வதற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டைக் குறிப்பிடுவதற்கும் இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
53 minute ago
1 hours ago
1 hours ago