2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டனில் ஆடுகிறது கொரோனா்; ஐவர் தனிமை

Editorial   / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் தலைவர் உட்பட  ஐவர்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலச்சந்திரன் உட்பட  ஐந்து பேர், இன்று (23) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என பொது சுகாதார பரிசோதகர் ஆர்.பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

கடந்த 16 திகதி மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது, அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர்  சுப்பிரமணியம் கதிர்ச்செல்வனுக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 16ஆம் திகதிக்குப் பின்னர், நடைபெற்ற அரசியல் மற்றும் ஏனைய கூட்டங்களில் அவரும் கலந்து கொண்டுள்ளார். அவருடன் கலந்து கொண்டவர்களே இவ்வாறு இன்று (23) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் முன்னாள் மத்திய மாகாண சபை பிலிப்குமார், ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் இரண்டு உறுப்பினர்கள் மற்றும் அக்கரபத்தனை பிரதேச சபையின் செயலாளர் ஆகியோர் இன்று (23) ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த பிரதேச சபை தலைவர் கண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலும் பங்கேற்றுள்ளார் தலவாக்கலை மற்றும் கொட்டகலை சி.எல்.எப் ஆகிய இடங்களுக்கு சென்று வந்துள்ளதால் அவருடன் நெருங்கி பழகியவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  சுகாதார துறைச்சார்ந்தோர் தெரிவிக்கின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X