2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

ஹோமாகம படுகொலை முயற்சி: சந்தேகநபர்கள் கைது

Freelancer   / 2024 நவம்பர் 29 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 14ஆம் திகதி, ஹோமாகம வைத்தியசாலை வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் துப்பாக்கிச் சூட்டை நடத்தி கொலை செய்ய முயற்சித்த இரு சந்தேகநபர்கள், மெகொட, அடிகல பிரதேசத்தில் வைத்து துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே,இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 கொலை முயற்சி, பலத்த காயம் விளைவித்தல், துஷ்பிரயோகம் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

 கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 26 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் கொழும்பு மற்றும் மீகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​வெளிநாட்டில் மறைந்திருந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. 

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .