Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 மார்ச் 29 , பி.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடுமாறு கோரி, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன, தனது சட்டத்தரணிள் ஊடாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மீறல் மனுவொன்றை, புதன்கிழமை (29) தாக்கல் செய்தார்.
மடகஸ்காரில் கைதுசெய்யப்பட்ட தான், தற்போது குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டவராகவோ அல்லது சந்தேகநபராகவோ குறிப்பிடப்பட்டுள்ள எந்த வழக்கிலும் தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.
தனது உயிருக்கு பாரிய ஆபத்து இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரியுள்ளார்.
பொலிஸ் மா அதிபர், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் மடகஸ்காரில் கைதுசெய்யப்பட்டு கடந்த 15ஆம் திகதி இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட ஹரக் கட்டா, குடு சலிந்து என்றழைக்கப்படும் சலிந்து மல்ஷிக உள்ளிட்ட 8 சந்தேகநபர்களும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
42 minute ago
53 minute ago
2 hours ago