2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

ஹெரோயினுடன் கைதான அதிபர் இடைநீக்கம்

Editorial   / 2025 நவம்பர் 07 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருமளவிலான ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபரை இடைநீக்கம் செய்ய வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் முடிவு செய்துள்ளார்.

அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தகவலின் அடிப்படையில், சந்தேக நபர், தாபன விதிக் கோவையின் விதிகளை மீறியுள்ளதாக அதிபருக்கு எழுதிய கடிதத்தில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். எனவே, உடனடியாக அவரை சேவையிலிருந்து இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பேலியகொட உள்ளூராட்சி மன்ற உறுப்பினரின் கணவரான அதிபர், சமீபத்தில் 1 கிலோகிராம் 118 கிராம் ஹெரோய்னுடன் கைது செய்யப்பட்டார். அவர்களின் மகனும் இதே குற்றச்சாட்டின் கீழ் கைது செ்யயப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X