2025 நவம்பர் 08, சனிக்கிழமை

ஹெரோயின் நுகர்ந்த மூவர் கைது

Freelancer   / 2025 நவம்பர் 08 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் நேற்று (07) ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்தப்பட்ட மருத்துவ ஊசி உள்ளிட்ட சில பொருள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

யாழ்ப்பாணம் பொலிஸ் போதைதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுள கருணாரத்ன தலைமையிலான குழுவினரின் ரோந்து நடவடிக்கைகளின் போது இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளைஞரும் அரியாலை பகுதியைச் சேர்ந்த முறையே 30 மற்றும் 32 வயதான இரண்டு இளைஞர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X