2026 மே 06, புதன்கிழமை

ஹர்ஷன இதற்கு பதிலளிக்க வேண்டும்!

Lenin Raj   / 2026 மே 04 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


2.5 மில்லியன் டொலர் திருட்டு சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இந்த வாரம் நாடாளுமன்றத்தில் பல விடயங்களை முன்வைக்கவுள்ளார்.

அத்துடன், திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவை நாடாளுமன்ற வரப்பிரசாதங்கள் குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அவர் முன்மொழியவுள்ளார்.

"அரசியலமைப்பின் 148வது பிரிவின் கீழ் பொது நிதி மீதான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து வருமானங்களும் திரட்டப்பட்ட நிதியத்தில் (Consolidated Fund) வரவு வைக்கப்பட வேண்டும்.

மேலும், கடன்களைத் தீர்க்கும் பொறுப்பும் இந்த நிதியத்தையே சாரும். சபையின் அனுமதியின்றி இந்த நிதியத்திலிருந்து பணத்தை விடுவிக்க முடியாது. எனவே, 2.5 மில்லியன் டொலர்கள் விடுவிக்கப்பட்டமையானது முறையான நடைமுறைக்கு புறம்பாக நடந்துள்ளது.

அந்த வகையில் இதற்கு திறைசேரி செயலாளரே பொறுப்பு," என பாராளுமன்ற உறுப்பினர் ஜயசேகர கூறினார்.

அத்துடன், "கடந்த வாரம் பொது நிதிக்குழுவின் முன்னிலையில் திறைசேரி செயலாளர் அழைக்கப்பட்டபோது, இது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த அவர் தவறியுள்ளார்.

தனது செயல்களின் மூலம் திறைசேரி செயலாளர் நாடாளுமன்ற வரப்பிரசாதச் சட்டத்தை மீறியுள்ளார். எனவே, அவர் வரப்பிரசாதக் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட வேண்டிய சாத்தியம் காணப்படுகின்றது" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக இந்த வாரம் நாடாளுமன்றத்தில் வரப்பிரசாதப் பிரச்சினை ஒன்றை எழுப்பவும் தயாசிறி ஜயசேகர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .