2021 ஜூன் 14, திங்கட்கிழமை

‘ஹெலிகளுக்கு ஒதுக்கியதை கொரோனாவுக்கு திருப்ப முடியாது’

Niroshini   / 2021 மே 10 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெலிக்கொப்டர்களைக் கொள்வனவு செய்வதற்கும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவும் வெளிநாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும் நிதியை வேறெந்த நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியாதென தெரிவித்த, கிராமிய வீதி அடிப்படை வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா, ​கொரோனாவைக் கட்டுப்படுத்தவும் முடியாது. அதுகூட எதிர்க்கட்சித் தலைவருக்கு புரியவில்லை என்றார்.

இலங்கையில் அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக வெளிநாடுகளுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கமைய அந்தப் பணிகளை நிறுத்தினால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அதிக பணத்தை செலுத்த வேண்டி ஏற்படுமெனத் தெரிவித்த அவர், அவ்வாறு செலுத்துவதாயின் இந்த நாட்டு மக்களின் வரிப் பணத்தையே செலுத்த வேண்டும். அதனால்தான் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகள் தாமதமின்றி முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.

அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு எந்தத் திட்டங்களுக்கும் பயன்படுத்த முடியாதெனத் தெரிவித்த அவர், அரசாங்கத்தால் கொள்வனவு செய்யவுள்ள ஹெலிகொப்டர்கள், ரஷ்யா கடன்திட்டத்தின் கீழ், கொள்வனவு செய்யப்படவுள்ளது. இந்த ஹெலிகொப்டர்கள், ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையுடன் இணைந்து செயற்படவுள்ளது என்றார்.

“அதேபோல்தான், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் இரண்டு வருடங்கள் தாமதமாகியுள்ளன. அதற்காக, 4,000 மில்லியன் ரூபாயை மேலதிகமாக செலுத்த வேண்டியுள்ளது” என்றார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சுபீட்சத்தின் நோக்கு என்ற கொள்கைக்கமைய மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதுடன், நாட்டின் அபிவிருத்தி பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு, அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார் என்றார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .