Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
“சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், தேசப்பற்றுள்ள ஒரு இளம் சட்டதரணியாவார்” என்று தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மோசமான அரசியல் கலாசாரத்தில் இருந்து அரசாங்கம் விடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், மனிதாபிமான பிரச்சினைகள், அரசமைப்பு விடயங்கள் தொடர்பிலும் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான செயற்பாடுகளின்போதும், மிகவும் துடிப்புடன் செயற்பட்டு, நீதிக்காக போராடி வருகின்றவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
“2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரசியலமைப்புக்கு விரோதமான ஆட்சி மாற்றத்தின்போது சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், உயர் நீதிமன்றில் நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்வதில் முன்னின்று செயற்பட்டிருந்தார்.
“அத்துடன் கடந்த காலங்களில் நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள், திட்டமிட்ட வன்முறைகளை எதிர்த்து துணிந்து போராடிய சட்டத்தரணியாக திகழ்ந்தவர்” என்றும் அந்த அறிக்கையில் அவரைப் பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் அவர்மீது அரசியல் ரீதியில் பழிவாங்கும் நோக்கிலே, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் தொடர்புபடுத்தி, அரசாங்கம் அவரை கைது செய்திருக்கின்றது என்றும் இது இந்த அரசாங்கத்தின் மிகவும் கண்டிக்கத்தக்க செயற்பாடாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் தேர்தலை இலக்காகக்கொண்டு அரசாங்கம் இனவாதத்தை கட்டவிழ்த்துவிடாது, நாட்டை மிக மோசமாக பாதிப்புறச் செய்திருக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago