2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோய்ன் விழுங்கி வந்த பாக். தம்பதி கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் போதைப்பொருள் அடங்கிய வில்லைகளை விழுங்கியவாறு, இலங்கைக்கு அவற்றைக் கடத்திவந்த பாகிஸ்தான் நாட்டுத் தம்பதியை, கட்டுநாயக்கா விமான நிலைய போதையொழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர்களை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, குறித்த பெண் விழுங்கியிருந்த 35 ஹெரோய்ன் வில்லைகள், வெளியில் எடுக்கப்பட்டுள்ளன. இவை, 350 கிராம் நிறையுடையவை என்றும் இவற்றின் பெறுமதி, 42 இலட்சம் ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளதாக, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தப் பெண், ஏற்கெனவே 6 முறை, இலங்கைக்கு வந்து சென்றுள்ளார் என்றும் அவருடன் வந்த ஆண், இன்றே முதன்முறையாக இலங்கைக்கு வந்துள்ளார் என்றும், விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .