2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஹெரோய்னுடன் ஒருவர் கைது

George   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் 300 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைபொருளுடன் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் குறித்த நபரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாதம்பிட்டிய வீதி, கொழும்பு - 14இல் வசிக்கும் 24 வயது சந்தேகநபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 300 கிராம் 460 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபரை, இன்றையதினம் மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .