2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அடையாளம் கண்ட எண்மருக்கும் பிணை

Kanagaraj   / 2016 ஜனவரி 06 , பி.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெமட்டகொடையில் இளைஞனொருவனைக் கடத்தித் தாக்கினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள எட்டுப்பேரும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்களென இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் பெரும்பாலானவை நிறைவடைந்து விட்டதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

அதனடிப்படையில், சந்தேகநபர்கள் எட்டுபேரும், தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை, ஏனைய சந்தேகநபர் தொடர்பில் இதுவரையிலும் சட்ட ஆலோசனை கிடைக்கவில்லை என்று அரச சட்டத்தரணி, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இளைஞன் ஒருவனை கடத்தி, தாக்குதல் நடத்தி அவரை இடையில் விட்டுவிட்டு சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட எண்மரையும் அடையாள அணிவகுப்புக்;கு உட்படுத்துமாறும் நீதவான் கடந்த 24ஆம் திகதியன்று உத்தரவிட்டிருந்தார்.

அதனடிப்படையிலேயே இந்த அடையாள அணிவகுப்பு நேற்று நடத்தப்பட்டது.

தெமட்டகொடவில் வைத்து 21ஆம் திகதியன்று இளைஞனொருவர்;, ஹிருணிகாவின் டிபெண்டரில் வந்த குழுவினரால் கடத்தப்பட்டார்.

இதேவேளை, இந்தவழக்கு எதிர்வரும் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X