2025 மே 19, திங்கட்கிழமை

'அமைச்சர்களுக்கு அன்று சுதந்திரமில்லை'

Thipaan   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் விளையாட்டுத்துறை கடந்தகாலத்தில் ஏற்பட்ட தோல்விகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர்கள் மீது நான், குற்றஞ்சுமத்த மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.

தடகள விளையாட்டு வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க, ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்று 15 வருடங்கள் நிறைவடைவதையொட்டி கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர், தொடர்ந்து உரையாற்றுகையில், நான், சுகாதார அமைச்சராகக் கடமையாற்றிய போது, அமைச்சர் என்றவகையில் சுதந்திரமாக வேலைசெய்வதற்கு எனக்குப் பொருத்தமான சுற்றுச்சூழல் இருக்கவில்லை. அதனையறிந்தே நான், குறைகூறமாட்டேன்.

சுகாதார அமைச்சராக நான் கடமையாற்றிய போது சுதந்திரமாக செயற்படுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் இருந்திருக்குமாயின், நாட்டின் சுகாதாரத்துறையானது தற்போது இருக்கின்ற நிலைமையை விடவும் மேம்படுத்தியிருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்த வைபவத்தில் விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகேயும் பங்கேற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X