2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

‘அரசியல் நிகழ்ச்சி நிரல் என்றால் அதிகாரத்தைப் பிரயோகிப்பேன்’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகளைப் பாதுகாத்து, ஊழல் மோசடிகள் அற்ற நாட்டை உருவாக்குவதற்காக நிறுவப்பட்டுள்ள நிறுவனங்கள், அரசியல் நிகழ்ச்சிநிரலில் செயற்படக்கூடாதென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அத்தோடு, தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டியேற்படுமெனவும் அந்நிறுவனங்களுக்கு, ஜனாதிபதி எச்சரித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இராணுவ, விமானப்படை, கடற்படை உறுப்பினர்களை, அரசியல் கைப்பொம்மைகளாக ஆக்கக்கூடாதென அனைவரையும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்புத் துறையினரை பலவீனப்படுத்துவதற்கு அல்லது படைவீரர்களுக்குக் களங்கத்தை ஏற்படுத்த இடமளிக்கும் வகையில் தான் செயற்படவில்லையெனவும், சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகள் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட சம்பவத்துடன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் தன்னால் உடன்பட முடியாதென்றும் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆகியன, அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுமாயின், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற வகையில், தனது அதிகாரத்தைப் பிரயோகிக்க வேண்டி வருமென, அவர் இதன்போது குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .