2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

26ஆம் திகதி இந்து சமய பொதுப்பரீட்சை

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 24 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்படுட்டு வரும் இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான சமயப் பொதுப்பரீட்சை, எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் பி.ப 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

அறநெறிப் பாடசாலை மாணவர்களின் வரவை அதிகரிக்க வேண்டும் எனும் நோக்கத்துடன், ஆண்டு இறுதிப் பரீட்சை போன்று இப்பொதுப் பரீட்சை வருடாந்தம் நடைபெறுவாதாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.  

இப்பரீட்சைக்கு 22 மாவட்டங்களைச் சேர்ந்த 77,000 மாணவர்கள் தோற்றவுள்ளனர். இதற்கென 183 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

பரீட்சைக்கு தோற்றுவதற்காக விண்ணப்பித்த அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான சுட்டெண்கள் அந்தந்த அறநெறிப் பாடசாலைகளுக்கு ஏற்கெனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X