2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘என்னைவிடக் கள்ளர்’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு எதிராக, மேலும் பல வழக்குகளைத் தாக்கல் செய்யவுள்ளதாகக் கூறிய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தன்னைக் கைது செய்யவந்த பொலிஸ் உத்தியோகஸ்தர், தன்னைவிடக் கள்ளர் என்றும் குறிப்பிட்டார்.

ஹம்பாந்தோட்டை, மைத்திரீகம பிரதேசத்தில், நேற்றுப் புதன்கிழமை (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “இந்நாட்டு நீதித்துறை தொடர்பில், தான் கொண்டுள்ள நம்பிக்கை, இன்னமும் நீடித்திருக்கிறது” என்றார்.  

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவிலிருந்து, தன்னைக் கைது செய்வதற்காக வந்திருந்த பொலிஸ் உத்தியோகத்தர், கொலைக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கொன்றிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்றும் இற்றைக்கு இரு வாரங்களுக்கு ​முன்னரே, அவருக்கு பிணை கிடைத்துள்ளதென்றும், இதன் மூலம், தன்னைச் சிறையிலடைக்க எண்ணியவர், தன்னை விடக் கள்ளர் என்பது உறுதியாகிவிட்டது என்றும் கூறினார்.  

“நாட்டில் இடம்பெற்றுவந்த கொலைச் சம்பவங்களில் 71 சதவீதமானவை நிறுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார். முதலில் அவர், தன்னுடைய திணைக்களத்துக்குள் இருக்கும் கள்ளர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்றும் ​நாமல் எம்.பி வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .