2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

'சு.க.வில் கோட்டாபய இணையவே மாட்டார்'

Gavitha   / 2016 ஜூன் 06 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்க, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆதரவை வழங்குவாராயின், அதனை நாம் பாராட்டி வரவேற்க வேண்டும்' என, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பல்வேறு கட்சிகள் இணைந்த, ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு, சிறந்த தலைமைத்துவமொன்று இல்லாமையால், கோட்டாபய ராஜபக்ஷவை, அக்கட்சியின் இரண்டாவது தலைவராக நியமித்து, உடைந்துள்ள கட்சியை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, தொழில் அமைச்சர் டபிள்யூ.டீ.ஜே.செனவிரத்ன வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் கூறுகையிலேயே பந்துள குணவர்தன எம்.பி, மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'கோட்டாபய ராஜபக்ஷவை
கட்சியில் இணைப்பது தொடர்பான எந்தவோர் அறிவித்தலும், இதுவரையில் உத்தியோகபூர்வமாக விடுக்கப்படவில்லை.

நாடு எதிர்நோக்கியுள்ள அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டுமாயின், அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைக்க வேண்டியேதே காலத்துக்கேற்ற நடவடிக்கையாகும்' என்றார்.

இதேவேளை, இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளருமான உதய கம்மன்பில, 'கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, அரசாங்கத்தரப்பில் உள்ள கேள்வி தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். இருப்பினும், தற்போதைய அரசாங்கத்துடன் அவர் ஒருபோதும் இணைய மாட்டார்' எனக் கூறினார்.

'அத்துடன், இந்த அரசாங்கத்தோடு, கோட்டாபய ராஜபக்ஷ இணையாமலிருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. கட்சியின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ, அதற்குக் காரணமில்லை. இந்த அரசாங்கம், அவர்களிருவரையும் கொண்டுவந்ததாலேயே, கோட்டாபய இணையமாட்டார்' என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .