Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜனவரி 18 , பி.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 30 சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சைகள் சட்டவிரோமான முறையில், இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக இந்தியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சர்வதேசரீதியிலான சட்டவிரோத சிறுநீரக மாற்று மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது, இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தியப் பொலிஸார் கூறியுள்ளனர்.
தெலுங்கானாவை தளமாகக் கொண்டு இயங்கிய வைத்தியர் மற்றும் அவரது உதவியாளர்களை தெலுங்கானா குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.
இவர்கள் புதுடெல்லி, ஆந்;திரா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலிருந்து சிறுநீரகங்களைப் பெற்று இந்த மோசடியில் ஈடுபட்;டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்கள், சட்டவிரோதமாக சிறுநீரகம் வழங்கும் நபர்களுக்கு தேவையான கடவுச்சீட்டு மற்றும் சுற்றுலா விசா என்பவற்றை பெற்றுக்கொடுத்து அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட 30 சிறுநீரக மாற்று சம்பவங்களுக்காக தலா 27 தொடக்கம் 30 இலட்சம் இந்திய ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
16 minute ago
20 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
32 minute ago
2 hours ago