Niroshini / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.நிரோஷினி
தனது ஜப்பான் விஜயத்தின் பின்னர் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு பெற்று கொடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் தேசிய கலந்துரையாடல் தொடர்பான அமைச்சர் மனோ கணேஷன் ஆகியோர் நேற்று புதன்கிழமை மாலை, பிரதமரை சந்தித்து, பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
இது தொடர்பில் அமைச்சர் பி.திகாம்பரம் கருத்து தெரிவிக்கையில்,
சம்பள பிரச்சினை விவகாரம் தொடர்பில் எமக்கு நேரடியாக தலையிட முடியாவிட்டாலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் அழுத்தங்களை கொடுக்க முடியும்.
அதன் ஒரு கட்டமே, தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பிரமருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டோம்.
இதற்கிணங்க,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உத்தியோகபூர்வ ஜப்பான் விஜயத்தின் பின்னர் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்கதாக உறுதியளித்துள்ளார் என்றார்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago