Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நல்லிணக்கத்தை அடைவதற்கு அரசாங்கம் ஆர்வத்துடன் உள்ளதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த காலத்தைக் கவனித்து, எதிர்காலத்தை நோக்கி அனைத்துச் சமூகங்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவுக்குப் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில், இந்தியாவுக்கு விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஜெனீவா மாநாட்டில் வைத்து இலங்கைக்குச் சாதகமான முடிவு பெறப்படுமென எதிர்பார்ப்பதாகவும், அதன் மூலமே மனித உரிமைகள் விடயத்துக்குக்கான தீர்வொன்று எட்டப்படுமெனவும் தெரிவித்தார்.
நாட்டில் நல்லிணக்கத்தை அடைவதற்கு அரசாங்கம் ஆர்வத்துடன் உள்ளதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த காலத்தைக் கவனித்து, எதிர்காலத்தை நோக்கி அனைத்துச் சமூகங்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்போது, வடக்கு, கிழக்கிலுள்ள போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்கான இந்தியாவின் ஆதரவுக்கும் பிரதமர் தனது நன்றியை தெரிவித்தார்.
ஒற்றையாட்சிக்குள் வைத்து, இலங்கைக்குள் எவ்வாறு அதிகாரங்களைப் பகிர முடியும் என்பது தொடர்பாக அரசாங்கம் சிந்தித்து வருவதாகத் தெரிவித்த அவர், அதை விட அதிகமானவை மேற்கொள்ளப்படுவதற்குச் சந்தர்ப்பமுள்ளதாகவும் தெரிவித்தார்.
மீள்கட்டுமானத்துக்கு இந்தியா வழங்கிய உதவிக்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்ததுடன் இப்பிராந்தியத்தின் சமாதானமும் உறுதிப்பாடும் எமது வெற்றிக்கு அடிப்படையாகும் என்றார்.
உறுதி குறையும் போது இருநாடுகளும் பாதிக்கப்படும். என்பதுடன் வியாபாரம், மூலதனம், தொழில்நுட்பம் என்பவற்றில் மேலும் ஒத்துழைப்பை வேண்டுகிறோம். அதுமட்டுமன்றி இந்தியாவுடனான உறவுகளைத் தொடர்வதற்கான மக்களின் ஆணை எமக்கு கிடைத்துள்ளது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
23 minute ago
49 minute ago