2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

நிதியை வீணடிக்கவில்லை: மத்திய வங்கி அறிக்கை

George   / 2016 ஜூன் 05 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தியோகபூர்வ விஜயங்களுக்காக மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் ஊழியர்கள், செலவழிக்கும் வீதத்தில் குறைவு ஏற்பட்டுள்ளதே ஒழிய, அதிகரிக்கப்படவில்லை என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கி ஆளுநர் ஊடாக, சிலர் தமது தனிப்பட்ட தேவைக்காக பொதுமக்களின் நிதியை ஒதுக்குவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளித்து வெளியிட்டுள்ள முதலாவது ஊடக அறிக்கையில் மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.

'மத்திய வங்கி ஆளுநர் அல்லது ஊழியர்கள் தமது தனிப்பட்ட தேவைகளுக்காக ஒரு சதத்தை கூட பெற்றிருக்கவில்லை.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டவிரோதமாக பொதுமக்களின் நிதி செலவழிக்கப்படவில்லை' என மத்திய வங்கியின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .