Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜனவரி 27 , பி.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கவிதா சுப்ரமணியம்
தேர்தல்கள் செயலகத் தகவல்களின் படி, 2015ஆம் ஆண்டுக்கான வாக்காளர் எண்ணிக்கை 3 இலட்சத்து 76ஆயிரத்து 712ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், இலங்கையின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 15,421,202ஆகும். 2014ஆம் ஆண்டில் வாக்காளர் எண்ணிக்கை 15,044,490ஆகவே காணப்பட்டது என, தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டது.
2015ஆம் ஆண்டுக்கான வாக்காளர் எண்ணிக்கையை நோக்குமிடத்து, நாட்டின் அதிக வேட்பாளர்கள், கம்பஹா மாவட்டத்திலேயே உள்ளனர் என்று பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். இம்மாவட்டத்தில் 1,681,887 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த அவர், கொழும்பு மாவட்டத்தில் 1,640,946 வாக்காளர்கள் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
2015ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புக்களின் பிரகாரம், வன்னி தேர்தல் மாவட்டத்திலேயே, மிகக் குறைவான வாக்காளர்கள் காணப்படுகின்றனர் எனவும், அவ்வெண்ணிக்கை 263,201ஆகக் காணப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .