2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

519,527 பேர் வரட்சியால் பாதிப்பு

Gavitha   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

நிலவும் அதிகூடிய வெப்பநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரையான தகவலின்படி, 138,585 குடும்பங்களைச் சேர்ந்த 519,527 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிலையம் தெரிவித்துள்ளது. 

கிழக்கு மாகாணத்தில் 38,063 குடும்பங்களைச் சேர்ந்த 133,313 பேரும் வடமத்திய மாகாணத்தில் 29,634 குடும்பங்களைச் சேர்ந்த 1,322,844 பேரும், வடமேல் மகாணத்தில் 19,673 குடும்பங்களைச் சேர்ந்த 65,374 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடமாகாணத்தில் 2,489 குடும்பங்களைச் சேர்ந்த 8,775 பேரும் சப்ரகமுவ மாகாணத்தில் 6,956 குடும்பங்களைச் சேர்ந்த 11,559 பேரும், ஊவா மாகாணத்தில் 11,206 குடும்பங்களைச் சேர்ந்த 44,824 பேரும் மத்திய மகாணத்தில் 5,228 குடும்பங்களைச் சேர்ந்த 19,846 பேரும், மேல் மகாணத்தில் 22,329 குடும்பங்களைச் சேர்ந்த 94,139 பேரும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .