2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

7பேர் விடுதலை விவகாரம்: முதல்வர் ஒதுக்கும் திகதியிலே ஊர்வலம் நடக்கும்

Thipaan   / 2016 ஜனவரி 19 , பி.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 26 வருடச் சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஊர்வலமொன்று நடத்தப்படும் என்று நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னையில், திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே, நடிகர் சங்கம் மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில், நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, 'பெப்சி' தலைவர் ஜி.சிவா ஆகியோர் பங்கேற்றனர்.

அங்கு அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஏழு பேரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, நடிகர் - நடிகைகள், இயக்குநர்கள், திரைப்படத் தொழிலாளர்கள் உள்ளிட்ட திரையுலகின் அனைத்துச் சங்கத்தினரும் இணைந்து சென்னையில் ஊர்வலம் நடத்தி முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டு உள்ளோம்.

அதற்கான நேரத்தை ஒதுக்கித் தருமாறு முதல்வருக்கு முதலில் கடிதம் எழுதப்படும். அவர், ஒதுக்கும் திகதியிலே கவனயீர்ப்பு ஊர்வலம் நடைபெறும். இந்த ஊர்வலத்தின் மூலம் தமிழக மக்களின் ஒட்டுமொத்த கவனமும் ஈர்க்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேர் கடந்த 26 வருடங்களாக சிறையில் இருக்கின்றனர். இந்த 7 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அப்போது, அரசு விரும்பினால் 435ஆவது பிரிவின் கீழ் இவர்களை விடுதலை செய்யலாம் என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து, மாநில அரசு அவர்களை உடனடியாக விடுதலை செய்ய முயற்சி மேற்கொண்டது.

ஆனால், மத்திய அரசு அதற்கு உடன்படவில்லை. இதனால் விடுதலையில் முட்டுக் கட்டை ஏற்பட்டது. 2 அரசுகளும் ஒருமித்த கருத்துடன் இருந்திருந்தால் அவர்கள் விடுதலையாகி இருப்பார்கள். ஆனால் அது நடக்கவில்லை.

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிற இந்த நல்ல நேரத்தில் அந்த 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதனை வலியுறுத்தியே இந்த கவன கவனஈர்ப்பு ஊர்வலம் நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.


  Comments - 0

  • msm marzook Wednesday, 20 January 2016 06:06 AM

    must be punished no rlease

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X