2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

'மக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள ஆயுத களஞ்சியசாலைகளை அகற்றவும்'

George   / 2016 ஜூன் 06 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள ஆயுத களஞ்சியசாலைகளை அகற்றி, மக்களின் சாதாரண வாழக்கையை பாதுகாப்புமாறு மக்கள் விடுதலை முன்னணி, அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொஸ்கம சாலாவையில் இருந்த ஆயுத களஞ்சியத்தை அங்கிருந்து அகற்றுமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதேசவாசிகளால் கோரிக்கை முன்வைப்பட்டதாக அக்கட்சியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சாலாவ இராணுவ முகாமைச் சுற்றியுள்ள பிரதேசம், பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் வசிக்கும் கிராமம், அரச வைத்தியசாலை மற்றும் பெருமளவான பொதுகமக்கள் வசிக்கும் இடம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை(06) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பிரசார செயலாளர் இவ்வாறு கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .