Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா,எஸ்.ஜமால்டீன்,எம்.எஸ்.எம். ஹனீபா
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை மற்றும் சட்டவிரோதமான முறையில் கூட்டம் நடத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 13 மாணவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதவானுமான எச்.எம் முகம்மது பஸீல் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தியபோதே அவர்களை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் விடுதி வசதி ஏற்படுத்தி தருமாறு கோரி கடந்த 1ஆம் திகதி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பல்கலைக்கழத்தின் சொத்துக்களுக்கு மாணவர்களினால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்தார்.
இதையடுத்து, அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பேரிலேயே மேற்குறித்த குற்றச்சாட்டுக்களின் பேரில் 13 மாணவர்கள் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025