Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 06 , பி.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையை இவ்வருட இறுதிக்குள் அவ்விடத்திலிருந்து முழுமையாகவே அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருந்து என்று தெரிவித்த மேற்கு கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, பெருந்தொகையான ஆயுதங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன. தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கு, 10 சதவீதமான ஆயுதங்களே இருந்தன என்றும் கூறினார்.
'அங்கு களஞ்சியப் படுத்தப்பட்டிருந்த ஆயுதங்கள், வெடிபொருட்கள் யாவும், தரப்படுத்தப்பட்டே நிலத்துக்கு கீழ் மற்றும் நிலக்கீழ் சுரங்கத்தில் வைக்கப்பட்டிருந்தன' என்றும் அவர் தெரிவித்தார்.
'இங்கு களஞ்சியப்படுத்தப் பட்டிருந்த ஆயுதங்கள், வெடிபொருட்கள் தொடர்பிலான தரவுகள் உள்ளன. எனினும், அதன் பெறுமதி, காலத்துக்கு காலம் மாறுபடும் என்பதனால் தீயில் நாசமடைந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களின் பெறுமதியை கூறமுடியாது' என்றார்.
'இதேவேளை, இந்த இராணுவ முகாமுக்கு அருகில், அங்கவீனமடைந்த படையினர் வாழ்கின்ற, இரண்டு இராணுவ கிராமங்களைச் சேர்ந்த எவருக்கும் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை' என்றும் கூறினார்.
15 minute ago
23 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
46 minute ago
2 hours ago