2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

‘வடக்கு, கிழக்கு என்று கூறிக்கொண்டு நாட்டுக்குத் தீ மூட்டுகின்றனர்’

Gavitha   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கடும் வரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், வனாந்தரங்களுக்கு விஷமிகள் தீ வைக்கின்றனர். எனினும், அரசியல்வாதிகள் சிலர், வடக்கு, கிழக்கு என்று கூறிக்கொண்டு, நாட்டுக்குத் தீ மூட்டுகின்றனர் என்று மல்வத்து மாகாநாயக்க தேரர் அதி வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்தார். 

வரட்சியினால் மக்கள் பெரும் துன்பங்களுக்கு முகங்கொடுத்து கொண்டிருக்கின்றனர். மக்களுக்குத் தேவையான நிவாரணங்களைப் பெற்றுகொடுப்பதற்கு வெளிநாட்டு உதவிகள் கட்டாயம் தேவைப்படுகின்றன. எனினும், அரசியல் இலாபத்துக்காக நாட்டுக்கே தீ வைக்கப்படுமாயின், அவ்வாறான உதவிகள் எதுவுமே கிடைக்காது என்றும் அவர் கூறினார். 

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். அதன் போதே மாநாயக்க தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .