2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

5 வயது சிறுமி படுகொலை: இருவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கழுந்துநெரித்து கொலைசெய்யப்பட்ட 5 வயதான செயா சந்தவமியின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்களான கெலும் அத்தநாயக்க (வயது 33) மற்றும் 18 வயதான பாடசாலை மாணவன் ஆகிய இருவருமே எதிர்வரும் 28 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதவான் டி.ஏ.ருவன் பத்திரண உத்தரவிட்டுள்ளார்.

கம்பஹா, கொட்டதெனியாவ, அகரங்கஹ பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (11) இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளை காணாமல் போன 5 வயது சிறுமி, ஞாயிற்றுக்கிழமை(12) காலை சடலமாக மீட்கப்பட்டார்.

கொட்டதெனியாவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஐந்து வயது சிறுமி, பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு பட்டியொன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0

  • zavahir Sunday, 20 September 2015 01:25 AM

    To be established special inquary panel and punish instantly, preferable to be punished publicly.

    Reply : 0       0

    zavahir Sunday, 20 September 2015 01:26 AM

    To be established special inquary panel and punish instantly, preferable to be punished publicly.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X